web log free
June 29, 2026
kumar

kumar

ஒரு லிட்டர் எத்தனால் விலை குறைக்கப்பட்டுள்ளதால், ஒரு பாட்டில் சாராயத்தின் விலையைக் குறைக்க முடியும் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கூறுகையில்,

"எத்தனால் லிட்டருக்கு 1,500 மற்றும் 1,700 என விலை நிர்ணயம் செய்யப்பட்டபோது, ​​ஒரு பாட்டில் சாராயத்தின் விலை மாறவில்லை. விலை 1,500 ஆக இருந்தபோதும்,  நிறுவனம் ஒரு பாட்டில் சாராயத்தை 3,500 மற்றும் 4,000க்கு விற்றது. இப்போது, ​​அது 475 ஆகக் குறைக்கப்பட்டபோதும், ஒரு பாட்டில் விலை அப்படியே உள்ளது."

475க்கு ஒரு லிட்டர் எத்தனால் வாங்கினால், ஒரு லிட்டர் எத்தனாலில் இருந்து 3 பாட்டில்கள் சாராயம் தயாரிக்கலாம். பிறகு, ஒரு லிட்டர் எத்தனாலைக் கொண்டு 475 ரூபாய்க்கு 3 பாட்டில்கள் சாராயம் தயாரிக்க முடிந்தால், எவ்வளவு குறைவாக விற்க முடியும்?

கல்லோயா, அத்திமலே போன்ற உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ஒரு பாட்டில் சாராயம் தயாரிக்க உரிமம் வழங்குமாறு அவர்கள் கேட்டனர். இதுதான் அங்கே பிரச்சனை. அது எங்கள் பிரச்சனை இல்லை. நான் இதை ஜனாதிபதியிடம் தெரிவிப்பேன்."

அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்படும்  450 பில்லியன் ரூபா வருவாய் இந்த ஆண்டுக்கான  வாகன  இறக்குமதி மூலம்  அடையப்படும் என பொது நிதி குழுவில் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.  

ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் ரூ. 136 பில்லியன் வருவாய் வாகன இறக்குமதி மூலம்  ஈட்டியதாக அவர் தெரிவித்தனர். 

நிகழ்வில் உரையாற்றிய குழுத் தலைவர் ஹர்ஷ டி சில்வா கூறியதாவது:

"வாகனங்கள் இறக்குமதி ஊடாக உங்கள் இலக்கை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன், மேலும் வெளிப்படையாகச் சொன்னால், சுங்கத்துறை அந்தச் செயல்பாட்டில் சிறப்பாகச் செயல்படுகிறது என்பது தெளிவாகிறது,

பொசன் போயா பண்டிகைக்காக வழங்கப்படும் தன்சல்களில் பயன்படுத்தப்படும் தண்ணீர் குறித்து கவனம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

கடந்த சில நாட்களாக நிலவும் மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளில் நீர் ஆதாரங்கள் மாசுபட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

களுத்துறை- ஹொரணை பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் இருந்து சுமார் ஐம்பத்தைந்து கிலோகிராம் தங்கம் புலனாய்வுத் துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தங்கமானது நீண்ட காலமாக தான் சேர்த்து வைத்திருக்கும் இருப்பு என்று தொழிலதிபர் கூறியுள்ளார்.

எனினும், அத்தகைய இருப்பு எவ்வாறு என்பது என்பது குறித்த தகவலை அவரால் வெளியிட முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் தங்க இருப்புக்களை புலனாய்வுத் துறை பறிமுதல் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அறியப்படுகிறது.

கொழும்பு மாநகர சபையின் கன்னி அமர்வு எதிர்வரும் ஜீன் 16ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

இன் நிகழ்வு கொழும்பு நகரசபை மண்டபத்தில் இடம்பெறும் கூட்டத்தில் முதல் அலுவலாக புதிய நகரசபையின் மேயர் பிரதி மாநகரசபையின் மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

கொவிட்-19 வைரஸின் பரவல்  குறித்து பதிவாகும் எண்ணிக்கையின் அடிப்படையில், சுகாதார அமைச்சு அடுத்த கட்ட தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொவிட் வைரஸ் தொற்றை  எதிர்கொள்வது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து ஏற்கனவே பெற்றுக் கொண்ட  அனுபவங்களின் அடிப்படையிலும் உலக சுகாதர  அமைப்பின் ஆலோசனைகளுக்கு இணங்கியும் இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும்  அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர்:கொவிட் புதிய திரிபு குறித்து உலக சுகாதார அமைப்புடன்  அடிக்கடி கலந்துரையாடி வருகிறோம்.

மருத்துவமனைகளில் பீ.சீ.ஆர்.சோதனைகளை நடத்தி வருகிறோம்.பொறுப்பற்ற முறையில் எந்த தீர்மானங்களையும் எடுக்க முடியாது.

மக்களின் நலன் கருதியே முடிவுகள் எடுக்கப்படும். விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் சோதனைகள் நடத்த தீர்மானிக்கப்படவில்லை. தேவைப்பட்டால் அந்த முடிவையும் அரசாங்கம் எடுக்கும் என்றார்.

அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர் நேற்று இரவு (ஜூன் 2) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவருடன் 15 பேர் கொண்ட குழுவும் வருகை தந்துள்ளது.

அவுஸ்திரேலிய தூதுக்குழுவை பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சுனில் வட்டகல உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.

இந்த விஜயத்தின் போது, துணைப் பிரதமர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜய்த ஹேரத் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, அவர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவையும் சந்திப்பார் எனன தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் Starlink சேவைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தேவையான அனைத்து நடைமுறைகளையும் நிறைவு செய்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். 

Starlink இலிருந்து பெறப்படவுள்ள தகவல் கட்டுப்பாட்டு பலகை (Dashboard) கிடைத்தவுடன், எவ்வித தாமதமும் இன்றி சேவைகளை ஆரம்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். 

2025 ஆசிய தொழில்நுட்ப உச்சி மாநாட்டுடன் இணைந்து சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த இருதரப்பு சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டார். 

இந்த சந்திப்பில் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச தொடர்பு மற்றும் தகவல் கொள்கை ஒருங்கிணைப்பாளரான தூதர் ஸ்டெஃபன் லாங் ஆகியோர் கலந்துகொண்டனர். 

கூகுள் மற்றும் மெட்டா போன்ற முன்னணி உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்திற்கான தொடர்ச்சியான ஆதரவு, நாட்டில் தரவு மையங்களை நிறுவுதல், AI அடிப்படையிலான தரவு மையங்களை உருவாக்குதல், சைபர் பாதுகாப்புச் சட்டத்தின் மேம்பாடு மற்றும் சைபர் பாதுகாப்பு நிறுவனத்தை வலுப்படுத்துதல், தற்போதுள்ள ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மற்றும் தரவு பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவை (AI) ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பல மூலோபாயப் பகுதிகள் விவாதிக்கப்பட்டன.

இந்த நாட்களில், ஆசிய பிராந்தியத்தில் பல நாடுகளில் கோவிட் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

அதன்படி, இந்தியா, சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஹாங்காங்கிலிருந்து அதிக வழக்குகள் பதிவாகியுள்ளன.

அண்டை நாடான இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 685 கோவிட்-19 வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அங்கு நான்கு இறப்புகளும் பதிவாகியுள்ளன.

இத்தகைய சூழலில், ஆசியாவில் பரவும் கோவிட் வைரஸின் ஒரு மாறுபாடான ஓமிக்ரான் வைரஸின் இரண்டு துணை வகைகள் இந்த நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிபுணர் டாக்டர் ஜூட் ஜெயமஹா தெரிவித்தார்.

இது பல மருத்துவமனைகளில் இருந்து எடுக்கப்பட்ட உயிரியல் மாதிரிகள் குறித்து மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியிலிருந்து பெறப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd