Print this page

இந்தோனேசியாவின் செமேரு எரிமலை வெடித்ததால் சுனாமி அபாயம்

December 04, 2022

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள செமேரு எரிமலை (இன்று) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெடித்துள்ளது.

 இதனால், எரிமலை உச்சியிலிருந்து 1.500 மீற்றர் உயரத்துக்கு, அதாவது கடல் மட்டத்திலிருந்து 5,176 மீற்றர் உயரத்துகு சாம்பல் பரவியுள்ளதால் ,வெடிப்பு பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு குடியிருப்பாளர்களை அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

ஜாவா தீவின் கிழக்குப் பகுதியிலுள்ள சேமேரு எரிமலை சுமார் 3600 மீற்றர் உயரமானது. அத்தீவின் மிக உயரமான மலை இதுவாகும்.
இந்தோனேசியாவின் பேரிடர் தணிப்பு நிறுவனம், BNPB, எரிமலை வெடிப்பு மையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும், எரிமலைக்குழம்பு பாயும்  காரணமாக ஆற்றங்கரைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்குமாறும் குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளது.

ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம், எரிமலை வெடிப்புக்கு பிறகு அங்கு சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை கண்காணித்து வருவதாக பொது ஒளிபரப்பு நிறுவனமான NHK தெரிவித்துள்ளது.