Print this page

பிரிட்டிஷ் பிரதமர் அவசரக் கூட்டம்


பிரிட்டனுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பலை ஈரான், ஹோர்முஸ் நீரிணையில் கைப்பற்றிய விவகாரம் குறித்து விவாதிக்க பிரிட்டிஷ் பிரதமர் திரேசா மே இன்று (ஜூலை 22) அவசரக் கூட்டம் நடத்தவுள்ளார்.

அதன் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து லண்டன் ஆலோசித்து வந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிரிட்டிஷ் போர்க் கப்பல் விடுத்த எச்சரிக்கையையும் மீறி ஈரானியப் புரட்சிப் படையினர் பிரிட்டிஷ் எண்ணெய் கப்பலை ஹோர்மூஸ் நீரிணையில் கைப்பற்றியதைக் காட்டும் காணொளியைப் பிரிட்டிஷ் அதிகாரிகள் கண்டனர்.

கைப்பற்றப்பட்ட பிரிட்டஷ் கப்பல் ஈரானின் பண்டார் அபாஸ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.