Print this page

பாதுகாப்பு கோரி ஆஸ்திரேலியாவில் பேரணி

பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி ஆஸ்திரேலியாவின் சில முக்கிய நகரங்களில் நேற்று (ஜனவரி 20) ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணி நடத்தினர்.

மெல்பர்ன் நகரில் இஸ்ரேலிய மாணவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்தப் பேரணி இடம்பெற்றது.

சிட்னியில் சுமார் 3,000 பேர் பேரணியில் பங்கேற்றதாகக் கூறப்பட்டது.

ஆய்யா மாசர்வே (Aiia Maasarwe) எனும் 21 வயது இஸ்ரேலிய மாணவி சாலையோரத்தில் நடந்துகொண்டிருந்தபோது தாக்கப்பட்டார்.

அதன் தொடர்பில், 20 வயது ஆண் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்த இன்னும் கடுமையான நடவடிக்கை எடுப்பது பற்றித் திட்டமிடுவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மொரிசன் (Scott Morrison) கூறியிருக்கிறார்.