Print this page

யூ டியூப் மூலம் 460 கோடி சம்பாதிக்கும் சிறுவன்

அமெரிக்காவை சேர்ந்த ரியான் காஜி என்ற 8 வயது சிறுவன் தனது யூ டியூப் சேனல் மூலம் இலங்கை மதிப்பில் சுமார் ரூ.460 கோடி சம்பாதித்து முதல் இடத்தை பிடித்துள்ளான்.

உலகளவில் ‘யூ டியூப்’ சேனல் மூலம் அதிக வருமானம் ஈட்டும் நபர்களின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.

அதில் அமெரிக்காவை சேர்ந்த ரியான் காஜி என்ற 8 வயது சிறுவன் தனது யூ டியூப் சேனல் மூலம் 26 மில்லியன் டாலர் (இலங்கை மதிப்பில் சுமார் ரூ.460) சம்பாதித்து முதல் இடத்தை பிடித்துள்ளான்.

தற்போது இந்த சேனலுக்கு 2 கோடியே 30 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். ரியானின் பல வீடியோக்கள் 100 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளன. ரியான் தற்போது சிறிய அளவிலான அறிவியல் பரிசோதனைகளையும் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறான்.

அதே போல் ரஷ்யாவை சேர்ந்த 5 வயது சிறுமியான அனஸ்டாசியா ராட்ஜின்ஸ்காயா 18 மில்லியன் டாலர் (இலங்கை மதிப்பில் ரூ. 256 கோடி) வருமானத்துடன் 3வது இடத்தை பிடித்து இருக்கிறாள்.

Last modified on Monday, 23 December 2019 02:32