Print this page

ஈராக் பாராளுமன்றில் அதிரடியாக சட்டமூலம் நிறைவேற்றம்

ஈராக் பாராளுமன்றில் இன்றைய தினம் வெளிநாட்டு இராணுவத்தினர் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈராக்கில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலினால் ஈரானின் புரட்சிகர காவல் படைப் பிரிவின் தலைவரான ஜெனரல் குவாசிம் சுலைமான் படு கொலை செய்யப்பட்டமைக்கிணங்கவே இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் பக்தாதாத்தில் உள்ள ஈராக் பாராளுமன்ற உறுப்பினர்கள், வான்வெளி, நிலம் உள்ள எந்த காரணத்தையும் வெளிநாட்டு இராணுவத்தினர் பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

ஈராக்கின் பிரதமர் அடெல் அப்துல் மஹ்தி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆற்றிய உரையில் வெளிநாட்டு இராணுவ பிரசன்னத்தை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்ததை அடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

ஈராக்கில் அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 5000 இராணுவத்தினர் உள்ளனர்.

இதேவளை ஜெனரல் குவாசிம் சுலைமான் உடல் ஈரானுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் ஆயிரக்கணக்கான ஈராக்கியர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Last modified on Tuesday, 07 January 2020 00:35