Print this page

'2038 க்குள் நிலக்கரிப் பயன்பாட்டுக்கு முடிவு'

ஜெர்மனி, மின்சார உற்பத்திக்காக நிலக்கரியைப் பயன்படுத்துவதை 2038ஆம் ஆண்டுக்குள் நிறுத்திக் கொள்ளும் என்று அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தெரிவித்திருக்கிறது.

சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நிலக்கரியின் பயன்பாட்டைக் கட்டங்கட்டமாக முடிவுக்குக் கொண்டுவரும் 80 பில்லியன் யூரோ திட்டத்தை ஆணைக்குழு வெளியிட்டது.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான கடப்பாட்டை வலுப்படுத்த ஐரோப்பாவின் ஆகப் பெரிய பொருளியலான ஜெர்மனி கடுமையான நெருக்குதலை எதிர்நோக்கி வந்தது.

பல மாதக் காரசார விவாதத்துக்குப் பின் நிலக்கரிப் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான காலக்கெடு குறித்து ஆணைக்குழு இணக்கம் கண்டது.

அரசியல்வாதிகள், பருவநிலை நிபுணர்கள், தொழிற்சங்கங்கள், நிலக்கரி வட்டாரப் பிரதிநிதிகள் அடங்கிய குழு நேற்று நடந்த நீண்ட நேரக் கூட்டத்திற்குப் பிறகு அந்த முடிவு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Last modified on Sunday, 27 January 2019 02:14