Print this page

அன்னா ஹசாரே 6ஆவது நாளாக உண்ணாவிரதம்

February 05, 2019

தேசிய அளவில் லோக்பாலையும், மாநில அளவில் லோக் ஆயுக்தாவையும் அமைக்க வேண்டும், விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தன்னுடைய சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ரலேகன் சித்தியில் காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ந் திகதி அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்.

தொடர்ந்து 6-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதால் 71.1 கிலோகிராம் எடை இருந்த அன்னா ஹசாரே தற்போது 4¼ கிலோவை இழந்து விட்டதாகவும், ரத்த அழுத்தம் அதிகமாகி இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் சார்பில் அனுப்பப்பட்ட டாக்டர் தனன்ஜெய் கூறினார்.

 

Last modified on Tuesday, 05 February 2019 01:44