Print this page

ஜனாதிபதியின் மனைவி, முகக்கவசம் தைக்கிறார்

கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் நிலையில், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களை தவிர, ஏனைய சகலரும் தத்தமது வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.

வீட்டில் இருந்துகொண்டு என்ன? செய்கின்றோம் என பிரபலங்கள் சில, புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மனைவி சவிதா கோவிந், கொவிட்-19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் கைகோர்த்துள்ளார்.

ஜனாதிபதியின் வீட்டிலிருக்கும் அவருடைய மனைவி, முகக் கவசங்களை தைத்துகொண்டிருக்கின்றார்.

அவர், டில்லியில் இருக்கும் வீடற்றவர்களுக்கு, அதனை இலவசமாக விநியோகித்து வருகின்றார்.

Last modified on Thursday, 23 April 2020 23:59