Print this page

அரசியல் கட்சிகள் மீது WhatsApp நிறுவனம் குற்றச்சாட்டு

February 07, 2019


இந்தியாவில் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள சமயத்தில் அந்நாட்டு அரசியல் கட்சிகள் WhatsApp சேவைகளைத் தவறான முறையில் பயன்படுத்தி வருவதாகவும் அதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எந்தெந்தக் கட்சிகள் WhatsApp சேவைகளைத் தவறான முறையில் பயன்படுத்துகின்றன, அவை எப்படித் தவறான முறையில் பயன்படுத்துகின்றன என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஆனால் WhatsApp சேவை மூலம் கட்சிகள் பொய்த் தகவல்களைப் பரப்பக்கூடும் என்று கருதப்படுகிறது.

இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, எதிர்த்தரப்பான காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் பிரசாரங்களில் WhatsApp முக்கிய இடம்பெறுகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் பிரச்சினை குறித்துப் பேச மறுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் தலைவர், தமது கட்சி WhatsApp சேவைகளைத் தவறாகப் பயன்படுத்துவதில்லை என்று கூறியுள்ளார்.