Print this page

பிரதமர் பதவிக்கு 69 வேட்பாளர்கள் போட்டி

February 12, 2019

தாய்லந்துத் தேர்தல் ஆணைக்குழு அடுத்த மாதம் 24ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தலில் பிரதமர் பதவிக்கு 69 வேட்பாளர்கள் களமிறங்குவதாக உறுதிப்படுத்தியுள்ளது.

இளவரசி உபோன்ராத் (Ubolratana), பிரதமர் வேட்பாளராவதற்குத் தேர்தல் ஆணைக்குழு அனுமதி மறுத்துவிட்டது.

அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அரசியலில் ஈடுபடக்கூடாது என்றும், அரசியல் பதவிகளை வகிக்கக்கூடாது என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டது.

இவ்வேளையில், இளவரசியாரைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்த Thai Raksa Chart கட்சி, தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்திக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

அந்தக் கட்சி, இளவரசி உபோன்ராத்தைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது, நாட்டின் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கையா என்பது குறித்துத் தாய்லந்துத் தேர்தல் ஆணைக்குழு இன்று பின்னேரம் விவாதிக்கும் என்று கூறப்படுகின்றது.