Print this page

டொனால்ட் டிரம்ப் வைத்தியசாலையில் அனுமதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர் கடந்த புதன்கிழமை (30.9.2020) நடந்த பிரசார நிகழ்ச்சியின் போது ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உடன் சென்றிருந்தார்.

இதனால், டொனால்டு டிரம்பும் (74 வயது) அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் நேற்று கொரோனா பரிசோதனை செய்தனர். அதில் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா ஆகிய இருவருக்குமே கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெள்ளைமாளிகையில் இருந்த டொனால்டு டிரம்பிற்கு நேற்று முதல் தொடர்ந்து லேசான அறிகுறியுடன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வருவதால் மேல் சிகிச்சைக்காக ஜனாதிபதி டிரம்ப் அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட் தேசிய ராணுவ மருத்துமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளைமாளிகையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட ஜனாதிபதி டிரம்ப் வால்ட் ரேட் மருத்துவமனைக்கு வந்தடைந்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே ஜனாதிபதி டிரம்ப் மருத்துவனையில் அனுமதிக்கப்படுள்ளார் எனவும், சில நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் ஜனாதிபதி அதிகாரங்கள் தொடர்ந்து டிரம்ப் இடமே நீடிக்கும் எனவும், ஜனாதிபதி பணிகளை அவர் தொடர்ந்து கவனிப்பார் எனவும் வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Last modified on Friday, 23 October 2020 09:55