Print this page

பாலியல் தொழில் : சிக்கிய டிக்டாக் பிரபலம்!

December 10, 2020

பிரடிக்டாக் புகழ் ரௌடி பேபி சூர்யா பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுப்புலட்சுமி என்னும் பெண்மணி டிக்டாக்கில் ‘ரெளடிபேபி சூர்யா’ என்ற பெயரில் சில பல அந்த மாதிரி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

இவருக்கு நிறைய ஃபாலோயர்கள் டிக்டாக்கில் உள்ளனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல்.

இந்த நிலையில் திருச்சியில் மசாஜ் சென்டர்களில் காவல்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஸ்பா என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த மசாஜ சென்டரில் கடந்த ஒரு மாதத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுவரை 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவு பெயரில் திருச்சி தில்லை நகர், உறையூர், கே.கே நகர் உள்ளிட்ட பகுதிகளில் விபச்சாரத் தடுப்பு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது டிக்டாக் புகழ் சூர்யா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் பாலியல் தொழிலில் தான் ஈடுபடவில்லை என சூர்யா மறுத்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Last modified on Thursday, 10 December 2020 05:08