Print this page

சிறுவர் திருமணங்களில் அரைவாசிக்கும் மேல் இந்தியா உள்ளிட்ட ஐந்து நாடுகளில் நடைபெறுகிறது : யுனிசெப் அறிவிப்பு

இதுவரை உலகில் 65 கோடி பெண்கள் சிறு பருவத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், அவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் வங்களாதேஷ், எத்தியோப்பியா, பிரேசில், இந்தியா மற்றும் நைஜீரியாவில் உள்ளனர் என்றும் யுனிசெப் எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மதிப்பிடப்பட்டுள்ளது.

 ஆபிரிக்காவில் சிறுவர் திருமணத்தின் அளவு அதிகமாக இருப்பதாகவும், அங்கு 35 சதவீத பெண்கள் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து தெற்காசியாவில் சுமார் 30 சதவீதமான பெண்கள் 18 வயதிற்கு முன் திருமணம் செய்து கொள்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லத்தீன் அமெரிக்காவில் சுமார் 24 சதவீதமும், மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் 17 சதவீத சிறுவர் திருமணங்களும் நடைபெறுகின்றன. கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் சுமார் 12 சதவீத சிறுவர் திருமணங்கள் நடைபெறுவதாக யுனிசெப் மேலும் தெரிவித்துள்ளது.