Print this page

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளில் தளர்வுகள்

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்‍கப்பட்டுள்ளதால் 06 பேர் வரையில்  பொதுஇடங்களில் ஒன்றாகக்‍ கூடுவதற்கு அனுமதியளிக்‍கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 03 கோடி பேருக்‍கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  35 லட்சம் பேருக்‍கு இரண்டாவது  தடுப்பு  ஊசி போடும் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இதனால் முதியோர் காப்பகங்களில் 62 சதவிகிதம் வரை கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு விதிகளில் தளர்வுகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இதன் படி பொதுவெளிகளில் அதிக எண்ணிக்‍கையாக 06 பேர் வரை ஒன்றாகக்‍ கூடுவதற்கு பொதுமக்‍களுக்‍கு அனுமதியளிக்‍கப்பட்டுள்ளது. இதே போல் சில விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தவும் அனுமதியளிக்‍கப்பட்டுள்ளது. திருமணம் போன்ற நிகழ்வுகளிலும் ஒரே நேரத்தில் 06 பேர் பங்கேற்ற அனுமதிக்‍கப்பட்டுள்ளது.