Print this page

இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமானார்

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் இன்று காலமானார். அவர் தனது 99 ஆவது வயதில் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சில மாதங்களாக சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அவர் காலமானார். தனது வின்ஸ்டர் கேசில் அரசு மாளிகையில் இளவரசர் பிலிப்பின் உயிர் பிரிந்ததாக பக்கிங்ஹேம் அரண்மனையிலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் சார்லஸின் தந்தையான பிலிப், முதுமை காரணமாக கடந்த 2017ஆம் ஆண்டு பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார். மேலும், இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் மிக அதிக காலம் இளவரசராக இருந்தவர் பிலிப் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Last modified on Friday, 09 April 2021 12:10