Print this page

சீனாவின் மிரட்டல்களுக்கிடையே புதிய போர்க்கப்பலை தாய்வான் அரசு கடற்படையில் சேர்த்துள்ளது

தாய்வான் நாட்டின் கடற்படையில் 'யூ ஷான்' என்ற பிரம்மாண்டமான கப்பல் புதிதாக சேர்க்‍கப்பட்டுள்ளது. நாட்டின் மிக உயரமான மலையின் பெயரை இக்‍கப்பலுக்‍கு சூட்டியுள்ள அந்நாட்டு அரசு, கடற்படையின் பல்வேறு தேவைகளுக்‍கு இக்‍கப்பல் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. ஏற்கனவே சீனாவின் ஒரு பகுதிதான் தாய்வான் என்றும், எந்நேரமும் அதைத் தன்வசப்படுத்த தயாராக இருப்பதாகவும் சீனா அறைகூவல் விடுத்துவரும் நிலையில், தாய்வான் அதிபர் சாய் இங்க்‍வென் கடற்படையை நவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

10,600 டன் எடையுள்ள இக்‍கப்பலை அந்நாட்டு அரசின் ஆதரவுடன் செயல்பட்டுவரும் CSBC நிறுவனம் கட்டியுள்ளது. இந்நிலையில், கடற்படையை நவீனப்படுத்தும் தாய்வான் அரசின் நடவடிக்‍கைகளை சீனா உன்னிப்பாக கவனித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.