Print this page

மடகாஸ்கரில் கொடூர பஞ்சத்தில் வெட்டுக்கிளியை உண்ணும் அவல நிலை

மடகாஸ்கரில் கடந்த சில மாதங்களாக கொடூர பஞ்சம் நிலவிவருகின்றது. இந்நிலையில் இன்றைய காலகட்டத்தில் பஞ்சத்தின் உச்சத்தில் பூச்சிப்புழுக்களை உணவாக உட்கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்று படி உலகின் முதல் பருவநிலை மாற்றம் பஞ்சத்தை எதிர்கொள்ளும் நாடு மடகாஸ்கர் என குறிப்பிட்டுள்ளது.  4 வருடம் மழை இல்லாமல் பல்லாயிரம் கணக்கான மக்கள் மோசமான பசி பட்டினியாலும் உணவு பாதுகாப்பின்மையாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.  கடந்த 4 தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வரட்ச்சி மடகாஸ்கர் நாட்டின் தெற்கில் இருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட விவசாய சமூகங்களை கடுமையா பாதித்துள்ளது.

இதனால் பூச்சிகளை வேட்டையாடி உணவாக உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 #Madagascar #ClimateCrisis #ClimateEmergency #ClimateChange #Climatedisaster #children

Last modified on Tuesday, 31 August 2021 05:55