Print this page

உலகிற்கு எச்சரிக்கை மணி அடித்தது சீனாவின் நடவடிக்கை

November 02, 2021

உலகிற்கு அச்சுறுத்தலாகும் வகையில் சீனா தற்போதுள்ள ஏவுகணை தளங்களைத் தவிர மேலும் மூன்று மூலோபாய ரீதியாக முக்கியமான இடங்களில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தளங்களை நிர்மாணித்து வருகின்றது.

அணு ஆயுதங்களை விநியோகித்தல் மற்றும் 5,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணையான சிலோ அடிப்படையிலான ஐசிபிஎம் என்ற ஏவுகணையின் வளர்ச்சியாக இந்த தளங்கள் இருக்கலாம் என கருதப்படுகின்றது. சீனாவின் இந்த நடவடிக்கையானது உலகம் முழுவதும் எச்சரிக்கை மணியை அடித்துள்ளது.

அணு ஆயுதங்கள் மற்றும் விநியோக அமைப்புகளின் நவீனமயமாக்கலுக்கான சீனாவின் முயற்சிகள் மிக வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன.

அதேபோன்று அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை சீனா உருவாக்குகிறது என்று உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான சர்வதேச மன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.

சீனா தனது விநியோக அமைப்புகளின் இருப்பு மற்றும் அணு ஆயுதங்களை சேமித்து வைத்திருப்பதன் அறிகுறியாகவே தற்போதைய நடவடிக்கைள் காணப்படுகின்றன.

உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ‘ஆயுதப் போட்டியைத் தூண்டும்’ சாத்தியம் இருப்பதால், சீனாவின் வளர்ச்சிகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியமாக உள்ளது என பன்னாட்டு அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.

Last modified on Tuesday, 02 November 2021 04:40