Print this page

சர்வதேச நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கட்டாய தனிமைப்படுத்தல்

சர்வதேச நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு 7 நாள் கட்டாய வீட்டுத் தனிமைப்படுத்தல் இருக்க வேண்டும் என மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளன. சில நாடுகள் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நாடுகளுக்கு விமான போக்குவரத்தை தடை செய்துள்ளன. இந்தியாவிலும் தொற்று பாதிப்பு அதிகமுள்ள குறிப்பிட்ட 20 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்த உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில், சர்வதேச அளவில் இருந்து இந்தியா வரும் அனைவரும் 7 நாள் கட்டாய வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும், 7 வீட்டு தனிமை முடிந்தபிறகு ஆர்டி பிசிஆர் சோதனை செய்யப்படும் என்றும், அதன் முடிவு வந்தபிறகே அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.