Print this page

5 வயது முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,465,811 உயர்ந்துள்ளது. கொரோனா தொடங்கியதிலிருந்து அந்நாட்டில் மொத்தம் 3,465 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது பல நாடுகளில் காணப்படும் இறப்பு விகிதத்தை விட மிகக் குறைவு.  இந்நிலையில் 16 மற்றும் 17 வயதுடைய சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய மருத்துக் கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்.
 
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரிட்டனில் சிறார்களுக்க பூஸ்டராகப் பயன்படுத்தப்படும்  ஃபைசரின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியாவிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.ஒமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா மூன்றாவது அலையை தடுக்க மக்கள் பூஸ்டர் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 
 
அதிக அளவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று.அந்த நாட்டில் 93 சதவிகிதத்திற்கும்  அதிகமானோர் இரண்டு தவணை தடுப்பூசியும்,  18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ்  தடுப்பூசியும் பெற்றுள்ளனர். மேலும் 5 முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்கு இந்த மாத தொடக்கத்தில் இருந்து தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.