Print this page

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

உள்ளுர் நேரப்படி அதிகாலை 4.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை

நிலநடுக்கத்தை அடுத்து, அச்சமடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

நிலநடுக்கம் காரணமாக பொது மக்களுக்கோ அல்லது சொத்துகளுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என, அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.