Print this page

பொன்சேகா விவகாரம்: நிராகரித்தார் ஜனாதிபதி

நாடாளுமன்ற உறுப்பினர். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சு பதவியை வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியினர் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, ராஜித சேனாரத்ன, கபீர் ஹாசிம் ஆகியோர், கடந்த 30 ஆம் திகதியன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சை, சரத் பொன்சேகாவுக்கு ஏன்? வழங்க போவதில்லை என்பது தொடர்பில் ஜனாதிபதி இதன்போது விளக்கமளித்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.