Print this page

மன்னாரில் 12 கிலோ வெடிப்பொருட்கள் மீட்பு


மன்னார், சாந்திபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது, சீ-4 வகையைச் சேர்ந்த வெடிப்பொருட்கள், 12 கிலோ, கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சரக்கியுட் 6 உம் கைப்பற்றப்பட்டுள்ள. அவை காலவதியானவை என பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே இவை மீட்கப்பட்டுள்ளன.

அவையாவும் கிளிநொச்சி முகாமின், குண்டு செயலிழக்கும் பிரிவினரால் செயலிழக்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Last modified on Saturday, 04 May 2019 04:37