Print this page

இன்று கொழும்பில் ஒன்றுகூடும் சஜித் அணி

December 11, 2022

சமகி ஜன பலவேக கட்சியின் மாநாடு இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாடு இன்று பிற்பகல் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அதற்காக நாடு முழுவதும் உள்ள கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த மாநாட்டின் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தக் கோரி நாடு தழுவிய தொடர் போராட்டங்களை நடத்தவும் கட்சி தீர்மானித்துள்ளது.

திட்டமிட்ட தினத்தில் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்தும் நோக்கில் இந்த பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.