Print this page

பாடசாலைகள் மீண்டும் திறப்பு

December 11, 2022

சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்ட அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளும் நாளை (12) மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் விசாரணையின்படி, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை (09) அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அதிகாரிகள் தீர்மானித்தனர்.