Print this page

கொள்ளுப்பிட்டி சொகுசு கார் விபத்து, துபாய்க்கு தப்பிச்சென்ற சாரதி, துப்புரவு பெண்கள் கைது !

December 12, 2022

சனிக்கிழமை (10) காலை கொள்ளுப்பிட்டியில் முச்சக்கரவண்டியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளான 24 வயதுடைய வாகன சாரதி துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற அதே நாளில் சந்தேகநபர் டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் கொள்ளுப்பிட்டியில் தனது சொகுசு காரை முச்சக்கரவண்டியின் மீது பின்னால் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காரில் பயணித்த பெண் ஒருவர் விபத்தை நேரில் பார்த்தவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

விபத்தின் போது சந்தேகநபர் மற்றும் பெண் உட்பட இருவர் இரவு விடுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மதுபோதையில் பயணித்த இருவரை துடைப்பத்தால் தாக்கியதற்காக இரண்டு துப்புரவுப் பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

Last modified on Monday, 12 December 2022 13:37