Print this page

பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேரின் எதிர்காலம் கேள்விக்குறி

December 13, 2022

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 10 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி பிரபாத் ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக ஆட்சி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் அந்த மாணவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் மேலும் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்படும் மாணவர்களின் மாணவர் அந்தஸ்த்து இரத்து செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.