Print this page

அடுத்த பொது ஜனாதிபதி வேட்பாளர் ரணில்

December 14, 2022

ரணில் விக்கிரமசிங்க மொட்டு ஜனாதிபதி வேட்பாளர் அல்ல, நாட்டின் ஜனாதிபதி வேட்பாளர் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க யாருடைய ஜனாதிபதி வேட்பாளர் என ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பொதுச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் சொந்த வேட்பாளர் ரணில் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த, பிட்டகோட்டேவில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.