Print this page

இன்றைய வானிலை அறிக்கை!

December 14, 2022

இன்று (14) சில பிரதேசங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களில்  சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் எனவும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புக்கள் சிறிதளவு காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last modified on Wednesday, 14 December 2022 04:59