Print this page

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

December 14, 2022


இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா சதொச ஊடாக அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோ பருப்பு 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.

கோதுவை மா கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 250 ரூபாவாகும்.

இதேவேளை, ஒரு கிலோ வௌ்ளைப்பூண்டின் விலை 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 460 ரூபாவாகும்.

ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 190 ரூபாவாகும்.

அதேவேளை இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் டின் மீனின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 490 ரூபாயாகும்.

இதேவேளை, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எதிர்வரும் வாரத்தில் மேலும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று (13) இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Last modified on Wednesday, 14 December 2022 06:56