Print this page

முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் ஜே.வி.பிக்கு தொடர்பு

December 14, 2022

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோசலிசக்கட்சியின் மாணவர் அமைப்பு மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து நாம் அனைவரும் கவனம் செலுத்தி சந்தேக நபர்களுக்கு உச்சபட்ச தண்டனையை வழங்க வேண்டும் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.