Print this page

தினேஸ் சாப்டர் கொலையுடன் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் பிரயின் தோமஸுக்கு தொடர்பா..?

December 16, 2022

பிரபல வர்த்தகர் தினேஸ் சாப்டரின் கொலையுடன் இலங்கை கிரிக்கெட் ஊடகப் பணிப்பாளர் பிரயின் தோமஸ் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது. 

பிரயின் தோமஸ் நடுநிலையாளராக செயற்பட்டு தினேஸ் சாப்டரிடம் 134 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விடயத்தில் ஏற்கனவே பிரயின் தோமஸ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். 

இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.