Print this page

நாளை தீர்மானம்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான நாடாளுமன்ற விவாத காலம் தொடர்பில் நாளைய தினம் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கைக்கு அமைய, விவாதத்திற்கு மேலதிக காலத்தை வழங்குவது குறித்து ஆராயப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.