Print this page

புலமைப்பரிசில் பரீட்சையின் போது மாணவர்கள் குழுவொன்றுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விரைந்த அதிகாரிகள்

December 19, 2022

நேற்று (18) நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் போது எஹேடுவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் குழுவொன்றுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அதிகாரிகள் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதிகாரிகள் இன்று (19) அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.

இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.