Print this page

அரச வங்கிகளில் மீண்டும் குட்டிப் போடும் வட்டி விகிதம்!

December 22, 2022

அரசுக்கு சொந்தமான வணிக வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் வட்டி விகிதங்கள் 15% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், வட்டி அதிகரிப்பு டிசம்பர் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் தேசிய சேமிப்பு வங்கி தெரிவித்துள்ளது.

இந்த வட்டி உயர்வு நிலையான வட்டி விகிதத்தில் எடுக்கப்பட்ட கடன்களுக்கும் பொருந்தும்.