Print this page

மீண்டும் தலைதூக்கும் கொரோனா குறித்து இன்று ஆராய்வு

December 27, 2022

சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், இலங்கை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 

இந்த விடயம் தொடர்பில் விசேட வைத்திய நிபுணர்களுடன் இன்று(27) கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.