Print this page

இந்தியாவிற்கு தப்பிச் சென்றார் கஞ்சிபானி இம்ரான்

பிரபல பாதாள உலக செயற்பாட்டாளராக கருதப்படும் கஞ்சிபானி இம்ரான் ராமேஸ்வரம் ஊடாக இந்தியா வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றங்களுக்காக சிறைவாசம் அனுபவித்த இம்ரான், சமீபத்தில் இலங்கை நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.