Print this page

18ம் திகதி தொடக்கம் 21ம் திகதிவரை வேட்பு மனு! வௌியானது அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நண்பகல் 12.00 மணிக்கு நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை கட்டுப்பணம் வைப்பிலிடுவதற்கான அவகாசம் உள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் மாவட்ட செயலாளர்களால் இன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட விளம்பரத்தில், திகதி, இடம், கட்டுப்பணம் தொடர்பான விவரங்கள், வேட்பாளர்களின் எண்ணிக்கை, பெண்களின் பிரதிநிதித்துவம் ஆகியவை அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.

341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 நிறுவனங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.