Print this page

கொழும்பில் 18 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

அவை கொழும்பு 1, 2, 3, 4, 7, 9, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்படும்.

அதன்படி, சனிக்கிழமை இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மாளிகாகந்த நீர்த்தேக்கத்திற்கு நீர் விநியோகம் செய்யும் கடத்தல் நீர் குழாய் அமைப்பு தொடர்பான திட்டங்களால் மேற்கொள்ளப்பட்ட அத்தியாவசிய முன்னேற்றமே இந்த நீர்வெட்டுக்கான காரணம்.

Last modified on Thursday, 05 January 2023 08:25