Print this page

மஹிந்த,கோட்டாவுக்கு கனடா தடை

முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ உட்பட நான்கு இலங்கையர்களுக்கு கனடா நாட்டுக்குள் நுழைய தடை விதித்துள்ளது.

மற்றைய இருவரும் இலங்கை இராணுவப் படைப் பிரிவின் அதிகாரி சுனில் ரத்நாயக்க மற்றும் கடற்படைப் புலனாய்வு அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு மோதல்களின் போது மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சுமத்தி கனடா அவர்கள் மீது இவ்வாறு தடைகளை விதித்துள்ளது.

அவர்கள் கனடாவுடன் வணிக உறவுகளில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு கனடாவில் ஏதேனும் சொத்து இருந்தால் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது