Print this page

தடையை நீக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை

பயங்கரவாத தாக்குதலுக்கு முகங்கொடுத்ததன் பின்னர் தற்போது நாடு இயல்பு நிலைக்கு மீண்டுவரும் அதேவேளை, பாதுகாப்பு படையினரின் வெற்றிகரமான நடவடிக்கைகள் காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்குள் பயங்கரவாத சவாலினை இலங்கையிலிருந்து இல்லாதொழிக்க முடியுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளோடு நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் தேசிய பாதுகாப்பு தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளதனால் தமது நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பிரயாணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கி இலங்கைக்கு மீண்டும் வருகை தருவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்குமாறு ஜனாதிபதி அனைத்து தூதுவர்களிடமும் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.