Print this page

இலங்கைக்கு பச்சை கொடி காட்டி நேசக்கரம் நீட்டியது இந்தியா

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக இந்தியா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

நேற்று மதியம் கடன் மறுசீரமைப்பு தொடர்பான சான்றிதழை இந்தியா வழங்கியுள்ளதாக ப்ளூம்பெர்க் இணையதளம் தெரிவித்துள்ளது.

இதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிப்பதில் இருந்த முக்கிய பிரச்சினை தீர்க்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.