Print this page

முக்கிய கலந்துரையாடல் நடத்த இன்று இலங்கை வருகிறார் ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் உத்தியோகபூர்வ விஜயம் ​மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் நேற்று (18) மாலைதீவுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அந்த பயணத்தை நிறைவு செய்து இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி ஆகியோரை சந்திக்கவுள்ளதுடன் இரு தரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.

மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தமிழரசு கட்சி உள்ளிட்ட தரப்புகளுடன் சந்திப்பு நடத்த உள்ளார்.