Print this page

கட்சித் தலைவர்களை அவசரமாகச் சந்திக்கிறார் ஜனாதிபதி ரணில்!

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் நாளை (26) பிற்பகல் 4.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் சர்வகட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த சர்வகட்சி கூட்டத்தில் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன். தேசிய மக்கள் சக்தி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்றதன் பின்னர், 2022 டிசம்பர் 13 ஆம் திகதி அழைக்கப்பட்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட நல்லிணக்க முன்னேற்ற வேலைத்திட்டம் தொடர்பில் மேலும் கலந்துரையாடப்படவுள்ளது.

இது தொடர்பில் கட்சித் தலைவர்கள் இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.