Print this page

ஜானகியின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

திலினி பிரியமாலியின் பாரிய பண மோசடி வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கிரிஷ் குழுமத்தின் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன வெளிநாடு செல்ல விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வியாபார நோக்கத்திற்காக இந்தியா செல்லவிருப்பதாக அவரது சட்டத்தரணிகள்  நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஆட்சேபனை காரணமாக  கோரிக்கையை நிராகரிக்க கோட்டை நீதவான் திலின கமகே தீர்மானித்தார்.