Print this page

உறுப்பினர் விலகினால் தேர்தலுக்கு தடை வருமா?

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா, தான் பதவி விலகுவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த பொய்யான தகவல்களுக்கு பதில் அளிக்க நேரத்தை செலவிடுவது கூட அர்த்தமற்றது என்றார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தயாரித்து வருவதாகவும் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவரின் பதவி விலகல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு இடையூறாக இருக்காது எனவும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பி.எஸ்.எம். சால்ஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து   ராஜினாமா செய்ததாக வெளியான செய்திகளுக்குப் பதிலளித்தார்.

இதுவரை தமக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஒரு உறுப்பினர் விலகுவது ஆணைக்குழு கூட்டத்திற்கு தேவையான முழுமைக்கு தடையாக இருக்காது எனவும் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் குறிப்பிட்டுள்ளார்.