Print this page

பல்கலைக்கழக மாணவர்கள் இன்றும் எதிர்ப்பு

ஹோமாகம பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைகழகத்தின் நிர்வாகத்தை உடனடியாக அகற்றி பல்கலைக்கழகத்தை உடனடியாக திறக்க வேண்டும் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியம் ஆரம்பித்த போராட்டம் இன்றும் தொடர்கிறது.

இதில் கலந்து கொண்ட ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட சாதாரண துறவற மாணவர்கள் குழு ஹோமாகம பிடிபன சந்திக்கு அருகில் அமைந்துள்ள பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்திற்கு முன்பாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தலவா தம்மிக்க தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறும், தன்னிச்சையாக இரத்துச் செய்யப்பட்ட 39 மாணவர்களின் கல்வியை உடனடியாக மீட்டெடுக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய நிர்வாகத்தை உடனடியாக அகற்றி, ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்திற்கு ஊழலற்ற புதிய நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்துமாறும், இணையவழிக் கல்வித் திட்டங்களை நிறுத்துமாறும், பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிக்குமாறும் கோரிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.