Print this page

தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம்

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையினால், மேற்படி ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் தற்போதுள்ள அதிகாரங்களின்படி சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான சூழலை உருவாக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொலைமிரட்டல் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.