Print this page

குண்டுவெடிப்பில் காயமடைந்த அமெரிக்க பெண் மரணம்

ஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த அமெரிக்க பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் கடமையில் ஈடுபட்டிருந்த செல்சியா டிகமினாடா என்ற, குறித்த பெண், அதிகாரி கொழும்பு செங்ரீலா ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதலின் போது காயமடைந்தார்.

மேலதிக சிகிச்சைக்காக விமானம் ஊடாக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில், அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.